day, 00 month 0000

முல்லைத்தீவில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறு உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம் எல்லைகளை கோடிட்டு ஒதுக்கிக்கொண்ட 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

வன பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அதிகார சபை மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பன முல்லைத்தீவு மக்களுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் எல்லைகளை நிர்ணயித்து, பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கிராம சேவகர்கள், மாகாண பொது அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அந்த நிலங்களை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரடியன்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை மேற்கு, மணலாறு பிரதேசங்களில் உள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள காணி சம்பந்தமான தேசிய கொள்கையை உருவாக்கும் குழுவிற்கு முல்லைத்தீவு மக்கள் மகஜர் ஒன்றை அனுப்பி இருந்தனர்.

குறித்த 29 ஆயிரம் காணிகளுக்கு மேலதிகமாக 17 ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட வன பாதுகாப்பு அதிகாரிகள் தடைவிதித்துள்ளதாக முல்லைத்தீவு மக்கள் அந்த மகஜரில் தெரிவித்திருந்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்