தமிழகத்தில் வாகனத்தின் முன் விழுந்து பெண்ணொருவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பாக மனதை உருக வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 46 வயதான பாப்பாத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த மாதம் 28ம் திகதி தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.
இது குறித்த விசாரித்த காவல்துறை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது வேண்டுமென்றே பேருந்து முன்னால் விழுந்து பாப்பாத்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்த விசாரணையில் உருக்கமான தகவல் வெளியானது.
அதன்படி பாப்பாத்தியின் மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.
அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45 ஆயிரம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை.
அப்போது யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் கூறியிருக்கின்றனர்.
இதனால் பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.