ரஷ்யாவில் இலங்கையை சேர்ந்த சுமார் 500 பேர் அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்தியர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குண்ட இலங்கையர்களே இவ்வாறு அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ உள்ளிட்ட பெரு நகர பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக இந்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஊடாக அண்மையில் ரஷ்யா நோக்கி பயணித்திருந்தனர்.
இருப்பினும், இவ்வாறு சென்ற இலங்கையர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவை போன்று தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் பன்றி பண்ணைகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.