தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத சில படைப்புகள் எத்தனையோ வந்துள்ளது.
அதில் மிக முக்கியமான திரைப்படம் ’காதல் கோட்டை’.
பார்க்காமலே காதல் என்ற புதிய விஷயத்தை பேசியது 'காதல் கோட்டை' திரைப்படம்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமார் - தேவயானி இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஆறாவது விரலாக இன்றைய தலைமுறையினருக்கு ஸ்மார்ட்போன் மாறிவிட்ட நிலையில் லேண்ட் லைன் தொலைபேசி, கடிதம் என்ற ஒன்று இருந்ததையும் அதை எப்படி காதலர்கள் பரிமாறிக் கொண்டார்கள் என்பதையும் அழகாக சித்தரித்தது இப்படம்.
இன்னும் எத்தனை காலம் கடந்தாலும், அனைவராலும் ரசிக்கப்படும் காதல் காவியமாக காதல் கோட்டை திரைப்படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!