cw2
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
உண்மை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும்.
குற்றவியல் வழக்குகளை தவிர்த்தல் சர்வதேச நியமங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
ஆவணங்களை அழிப்பதை தவிர்த்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் உரிய அமைப்புகள் திணைக்களங்களுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்கவேண்டும் - ஆவணங்களை அழிப்பதை குற்றமாக அறிவிக்கவேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்வைக்கப்படும் ஆதாரங்களை எதிர்கால வழக்குகளை நோக்கமாக கொண்டு பிந்தைய கட்டத்தில் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.