நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும், குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கண்டனப் பேரணியில் வடமாகாண இதர சட்டத்தரணிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.