day, 00 month 0000

சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன்.

இத்திரைப்படம் ஜூலை 14 ஆம் திகதி திரையில் வெளியாகவுள்ளது.

அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குனர் மிஸ்கின் வில்லனாக மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதில் பேசிய மிஷ்கின், மிகவும் ஒழுக்கமான மனிதர் சிவகார்த்திகேயன்.

ஒவ்வொரு சண்டைக்காட்சி முடிந்த பின்னும் அதில் ஈடுபட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பார்.

40, 50 வருடங்கள் சிவகார்த்திகேயன் சினிமா துறையில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன்.

மாவீரன் படம் முழுக்க முழுக்க நான் ஒரு வில்லனாக நடித்துள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது என கூறியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்