day, 00 month 0000

முல்லைத்தீவில் பயங்கரம்..! வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு - இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்