இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலி ஏற்பட்ட இயந்திர கோளாரு காரணமாக கப்பல் கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வௌளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.