day, 00 month 0000

கனடாவில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு

கனடா - ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த சிவசக்திராஜா அர்ச்சனன் என்ற இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன் கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரை குடும்பத்தினர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kashechewan முதற்குடி சமூகத்தில் இருந்து 20 படகுகளும் 50 தனி நபர்களும் இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸாரும் இவரை தேடும் முயற்சிக்கு உதவினர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவர் பயணித்த படகு ஆழமற்ற நீரில் நுழைந்ததால் வேகமாக ஓடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காஷேசெவனில் இரண்டு வாரங்கள் மட்டுமே பணிபுரிந்த உயிரிழந்த இளைஞர், ஃபோர்ட் அல்பானி ஃபர்ஸ்ட் நேஷனின் அருகிலுள்ள சமூகத்திற்கு மற்றொரு துணை மருத்துவர் மற்றும் செவிலியருடன் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்