ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சலூன்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களை மூடுமாறு தலிபான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒரு மாதத்துக்குள் இந்நிலையங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதை ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கப் பாதுகாப்பு மற்றும் தீயொழுக்கத் தடுப்பு விவகார அமைச்சு
ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்படும் பல வர்த்தக நிலையங்கள் இந்த உத்தரவின் காரணமாக மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரே வருமான வழியாகவும் இந்நிலையங்கள் அமைந்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் மற்றொரு கட்டுப்பாடு இதுவாகும்.
2021 ஆகஸ்ட்டில் தலிபான்கள் மீ;ண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு சிறுமிகள், பெண்கள் செல்வதற்;கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, உடற்பயிற்சி நிலையங்கள் முதலியவற்றுக்கும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்;பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களாக அமெரிக்கா தலைமையிலான படையினரின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது தலைநகர் காபூல் மற்றும் ஏனைய நகரங்களில் பெண்களுக்கான சலூன்கள் மற்றும் அழகுசிகிச்சை நிலையங்கள் பெரும் எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
ஆண்களின் பார்வையிலிருந்து விலகி, பெண்கள் ஒன்றுகூடுவதற்கும் உரையாடுவதற்கும் இந்த நிலையங்கள் வாய்ப்பளித்தன.
தனது சலூனில் 25 பெண்கள் பணியாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் தத்தமது குடும்பங்களுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் பிரதான நபர்களாக இருந்தனர். இனிமேல் என்ன செய்வது என்ற கலக்கத்தில் அவர்கள் உள்ளனர்' என சலூன் முகாமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
'இந்த சமூகத்தில் பெண்களே இல்லாவிட்டால் நல்லது என நான் எண்ணுகிறேன்' என தன்னை இனங்காட்ட விரும்பாத சலூன் முகாமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவை மீளப் பெறுமாறு ஆப்கானிஸ்தானிலுள்ள ஐநா தூதரகம் கோரியுள்ளது.