day, 00 month 0000

நஹெலை கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக 01 மில்லியன் நிதி திரட்டிய மக்கள்

பிரான்ஸில் நஹெல் என்ற ஆப்பிரிக்க இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் பிரான் முழுவதும் போர்களமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

நஹெலை சுட்டுக் கொலை செய்த பிரஞ்சு அதிகாரியான ஃப்ளோரியனிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக சில சிலர் நிதி சேகரித்துள்ளனர்.

இதுவரையில் பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக ஒரு மில்லியன் யூரோ கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நஹெலை விட, பொலிஸ் அதிகாரிக்கு அதிகளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது பல விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது.  இது ஒரு அவமானமான செயல் என இடதுசாரி கட்சிகள் விமர்சித்துள்ளன.

நஹலின் பாட்டி, காவலருக்குக் காட்டப்பட்ட ஆதரவைக் கண்டு “மனம் உடைந்ததாக” கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்