சுவீடனில் புனித குர்ஆன் நூல் எரிக்கப்பட்டமை தொடர்பில் ஆய்வதற்காக ஐநா மனித உரிமைகள் பேரவை அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் இன்று (4)தெரிவித்துள்ளார்.
சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பிரதான பள்ளிவசாசலுக்கு வெளியே கடந்த புதன்கிழமை நபர் ஒருவர் புனித குர்ஆனை எரித்தார்.
ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்த சல்வான் மோமிகா எனும் 37 வயது நபரே புனித குர்ஆன் நூல் ஒன்றின் பல பக்கங்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரியிருந்தார். \இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.
எனினும், ஓர் இனக்குழுமத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.
அதிக வெப்பம் காரணமாக, தீமூட்டுவதற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டடுள்ள தடையை மீறியமை தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக ஐநா மனித உரிமைகள் பேரவை அவசரக்கூட்டமொன்றை நடத்தவுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கை அடுத்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.