day, 00 month 0000

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியானது

இந்த ஆண்டுக்கான உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும், சிங்கப்பூர், போர்த்துகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் இருந்து பின்வாங்கப்பட்டுள்ளன.

உலகின் மிகவும் ஆபத்தான நாடு :

மேலும், உலகளவில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஐரோப்பா இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்