சுமார் 700,000 உக்ரேனிய குழந்தைகள் மோதல் வலயங்களில் இருந்து தங்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ரஷ்ய கூட்டமைப்பு கவுன்சிலின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் தப்பிச் செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வீட்டில் இருந்த ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகள் ரஷ்ய எல்லைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அரசாங்கம் குற்றம் சாட்டியது.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய 2022 பிப்ரவரி முதல் ஜூலை வரை 260,000 குழந்தைகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.