day, 00 month 0000

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த தொழிலதிபரின் இலங்கை விஜயம் பற்றி தெரியுமா?

இந்த நாட்களில் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலின் எதிர்பாராத விபத்து சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நார்ஜோலெட் ஆகிய ஐந்து பேர் இதில் துரதிஸ்டவசமாக உயிரிழந்தனர்.

எனினும், அந்த விபத்தில் உயிரிழந்த ஆங்கிலேய கோடீஸ்வர வர்த்தகர் ஹமிஷ் ஹார்டிங்(Hamish Harding), 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அநுராதபுரம் பொலன்னறுவைக்கு விஜயம் செய்து மீண்டும் குருநாகல் ஊடாக இங்கிலாந்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் குருநாகல் தம்புள்ளை பாதையில் முத்தெட்டுகல புகையிரத பாதைக்கு அருகில் தனது பண பையை தொலைத்துவிட்டார்.

எனினும், அந்தப் பகுதியைச் சேர்ந்த திலின திஸாநாயக்க என்பவரே ஹமிஷின் பணப்பையை நடை பாதையில் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர், பணப்பையில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு ஹமிஷ் அழைத்தபோது, ​​தனது பணப்பையின் மீதான நம்பிக்கையை கைவிட்டு இங்கிலாந்து திரும்புவதற்காக விமானத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், தனது பயணத்தை இரத்து செய்துவிட்டு, தனது பணப்பையைக் கண்டுபிடித்த ஹமிஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது பிரதி அதிபராக இருந்த தனது தாத்தாவின் ஆலோசனையின் பேரில், தான் அனைத்தையும் செய்ததாகவும், ஹமிஷ் தனது உணவு ஆசையை வெளிப்படுத்தியதால், ஹலப போன்ற உணவு மற்றும் பானங்களை கொண்டு வந்ததாகவும், பின்னர் தனது குழந்தையுடன் குருநாகல் அட்டகலவை பார்வையிட சென்றதாகவும் திலின குறிப்பிட்டுள்ளார்.

தான் செல்வதற்கு முன்னர் ஹமிஷ் தனது பணப்பையில் இருந்த அனைத்து டொலர் நோட்டுகளையும் பயப்பையை கண்டுபிடித்து கொடுத்த திலினவுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வழங்கிய பணத்தின் பெறுமதி பத்து வருடங்களுக்கு முன்பே 2 இலட்ச ரூபாய் பெறுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாம் அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் திலின குறிப்பிட்டார்.

மேலும். இந்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினரின் விபரங்களை தான் எப்போதும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டதாகவும் திலின தெரிவித்துள்ளார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்