day, 00 month 0000

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து கனடா விசாரணை

கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை, நீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான எந்தவொரு விடயங்களை கண்டறிந்து கொள்வதற்காக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சுமார் 12,500 அடி ஆழத்தில் இந்த விபத்து இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நீர்மூழ்கி கப்பல் கனடிய கொடியை தாங்கியது எனவும் கனடிய துறைமுகம் ஒன்றிலிருந்து புறப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது..

இதன் காரணமாக கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை இந்த நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்