day, 00 month 0000

பிரித்தானியா நோக்கி பயணித்த 54 அகதிகள் – சுற்றி வளைத்த அதிகாரிகள்

பிரித்தானியா நோக்கி பயணித்த 54 அகதிகள் பிரான்ஸி் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் பயணித்துள்ளனர்.

பாது கலே நகரில் port de Dunkerque துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி சிறிய மின்பிடி படகு ஒன்று பயணித்துள்ளது.

மொத்தமாக 54 பேர் இருந்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கரைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை ஏற்றிச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அறிய முடிகிறது.

படகில் பயணித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்