day, 00 month 0000

சீனாவில் வெடிப்பு சம்பவம்..! பலர் உயிரிழப்பு..! ஜனாதிபதி அதிரடி உத்தரவு

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள ஒரு உள்ளூர் விடுமுறை தினத்தன்று உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த சம்பவத்தில் பாதிப்படைந்த மேலும் ஏழு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவர் 'மோசமான நிலையில்' இருப்பதாகவும் மற்றைய இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதுடன் சிலருக்கு பறக்கும் கண்ணாடியால் கீறல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உணவகத்தில் எரிவாயு தொட்டி வெடித்து சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தையடுத்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இதுபோன்ற இடங்களுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போதுள்ள நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதேவேளை வெடிவிபத்தை அடுத்து உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் 100 க்கும் மேற்பட்ட நபர்களையும் 20 வாகனங்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் இன்று(22) அதிகாலை 4 மணியுடன் முடிவடைந்ததாகவும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்