சூடானிலிருந்து 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் எனவும், 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்னர் எனவும் அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி இன்று கூறியுள்ளார்.
கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
'சூடானில் மோதல்கள் ஆரம்பித்த பின்னர், அங்கிருந்து வெளியேறியோரின் எண்ணிக்கை இன்று அரை மில்லியனைக் கடந்துள்ளது' என கிராண்டி கூறினார்.
ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும், ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மோதல்கள் ஆரம்பமாகின. இதனால், 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.