day, 00 month 0000

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்தவாரம் புதியவர் நியமனம்

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு  மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில்  யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்