அமெரிக்க நாட்டின் வரலாற்றில் இது வரையிலும் எந்த ஒரு அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தன் மீது போலி வழக்குகளை பதிவு செய்து வருவதாக டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், பைடன் நிர்வாகத்தின் ஆயுதமேந்திய 'அநீதித் துறை' தன மீது கேலிக்குரிய மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசுக்கு சொந்தமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் டிரம்ப் தான் குற்றம் செய்யவில்லை என வாதாடியுள்ளார்.
அதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே தன் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து உணவகம் ஒன்றுக்கு சென்ற டிரம்புக்கு அவரது ஆதரவாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடி வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது