ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்கினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யான அறிக்கை என தெரியவந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை எந்த ஆதாரங்களும் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான எந்தவொரு நிறுவனத்திடமும் அல்லது திணைக்களத்திடமும் இந்த குழு எந்த விசாரணைகளையும் நடத்தப்படவில்லை என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சரத் வீரசேகரவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.