ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
உக்ரைனுடன் கடந்த பல மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் பெலாரஸ் நாட்டிற்கு அடுத்த மாதம் அணு ஆயுதங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார் விளாடிமிர் புடின்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றிருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் இராணுவம் பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத கிடங்கு அமைப்பது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அடுத்த மாதம் அதாவது வரும் ஜூலை மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைக்கும் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்த அணு ஆயுத கிடங்கு ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபரின் இந்த முடிவு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் ரஷ்ய அதிபர் புடினின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி பேரலைகள், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் என அனைத்தும் பலித்துள்ளதாக கூறப்படுகிறது. பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால் அணு ஆயுத விஷயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.