உக்ரைனின் டொனெட்ஸ்க் வட்டாரத்தில் 3 கிராமங்களை உக்ரைன் படையினர் மீட்டிருப்பதாக கூறியிருக்கிறது.
ரஷ்யத் துருப்பினருக்கு எதிரான தாக்குதல் தொடங்கிவிட்டதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்த மறுநாள் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
பிலாகொதாட்னே (Blagodatne) கிராமத்தில் முன்னேறிச் சென்று ரஷ்யத் துருப்பினர் சிலரைச் சிறைபிடித்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யத் துருப்பினர் கொடுத்திருக்கும் முக்கியமான தகவல்கள் மேலும் சில வட்டாரங்களை மீட்க உதவும் என்றும் அது கூறியது. Neskuchne, Makarivka ஆகிய கிராமங்களையும் மீட்டதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது.
பாக்முட் (Bakhmut) நகரில் உக்ரேனியப் படையினர் 1,400 மீட்டர் தூரத்துக்கு முன்னேறியிருப்பதாக அமெரிக்க ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது. அமைதிப் பேச்சுக்கு அடிப்படை ஏதும் இல்லை என்று கிரெம்ளின் அறிவித்ததும் உக்ரேன் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.