day, 00 month 0000

விமான விபத்தில் காணாமல் போன 4 சிறுவர்கள் கண்டுபிடிப்பு

விமான விபத்தில் காணாமல் போனதாகக் கருதப்படும் நான்கு சிறுவர்கள் அமேசன் வனப்பகுதியில் இருந்து 40 நாட்களுக்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நான்கு சிறுவர்களும் தேடப்பட்டு வந்தனர்.

சிறுவர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவர்கள் பலவீனமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உணவு தேவைப்படுவதாகவும், அவர்களின் மன நிலை மதிப்பீடு செய்யப்படும் என்றும் கொலம்பிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்