உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.
பக்முத்திற்கு கிழக்காகவும் ஜபோரிஜியாவிற்கு தெற்கிலும் உக்ரைன் படையினர் முன்னேறியுள்ளனர் அங்கிருந்து ரஸ்ய படையினரை நோக்கி நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டுள்ளனர்.
உக்ரைன் படையினர் தங்கள் தாக்குதல்நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் ஆனால் பெரும் இழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளனர் அது முறியடிக்கப்பட்டுள்ளது என ரஸ்ய ஜனாதிபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.