// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது

"இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது."

 இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண முனைந்தால் அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு தீர்வுக்கான பேச்சை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தால் அந்தப் பேச்சு தோல்வியில்தான் முடிவடையும்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த  விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள்." - என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்