day, 00 month 0000

ரஷ்யாவின் முக்கிய பகுதியில் இருந்து 4000 பேர் வெளியேற்றம்

 ரஷ்யாவின் பெல்கோர்ட் எல்லைப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பெல்கோரோடில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 600 குழந்தைகள் உள்ளதாக ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் பெல்கோர்ட் பகுதியில், ரஷ்ய சுதந்திர போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்