// print_r($new['title']); ?>
day, 00 month 0000

17 ஆண்டுகளாக கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழும் நபர்

அர்தேஷிரிக்கு உணவை பார்த்தாலே குமட்டல் வந்துவிடுமாம். இதனால், அவரது குடும்பத்தினர் இவர் முன்னிலையில் உணவு சாப்பிடுவதில்லையாம்.

செயற்கை இனிபூட்டப்பட்ட கோலா மற்றும் ஃபிஸ்ஸி (fizzy) போன்ற குளிர்பானங்கள் நம் உடல்நலனுக்கு கேடானவை என்றுதான் நாம் கேள்விபட்டிருப்போம். இருப்பினும் முற்றிலும் தவிர்த்து விடாமல், குதூகலத்திற்காக எப்போதாவது நாம் அவற்றை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால், நாம் தீங்கு என்று கருதும் செயற்கை குளிர்பானங்களை மட்டுமே குடித்து ஒரு நபர் 17 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹோலம்ரேஸா அர்தேஷிரி என்னும் நபர்தான், உணவை தொட்டுக்கூட பார்க்காமல் குளிர்பானங்களை குடித்தே பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார். ஃபைபர்கிளாஸ்களை சீரமைத்துக் கொடுப்பதன் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தில் இவரது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.

கோலா, பெப்ஸி பானங்களை மட்டுமே அருந்தி வரும் இவருக்கு பசி உணர்வே வருவதில்லையாம்! அதே சமயம், சராசரி மனிதரைப் போல முழு ஆற்றலுடன் தென்படுகிறார் அர்தேஷிரி. அவரது வேலையை இது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அதே சமயம், இந்த வினோதப் பழக்கம் எதனால் ஏற்பட்டது, எப்படி தொடருகிறது என்பது குறித்து அவர் அளிக்கும் விளக்கம்தான் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

உணவை தவிர்த்துவிட்டு முழுமையாக குளிர்பானங்களை எடுத்துக் கொள்ளத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கும் வகையில் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என்கிறார் அர்தேஷிரி. இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த காரணமும் இல்லாமல் திடீரென்றுதான் இந்தப் பழக்கம் ஏற்பட்டது. இப்போது வரை என்னால் காரணத்தை கண்டறிய முடியவில்லை.

ஆனால், என் வாயில் ஏதோ ஒன்று உறுத்துவதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. அதாவது ஒரு தடித்த முடி ஒன்று என் வாயில் இருப்பதைப் போல உணருகிறேன். அதிலும் முடியின் ஒரு பகுதி வாயிலும், மற்றொரு பகுதி என் வயிறு வரையிலும் நீண்டு இருப்பதைப் போல தெரிகிறது. நான் என்ன செய்தாலும் இந்த முடியை அகற்ற முடியவில்லை.

இந்த முடி என் தொண்டையில் சிக்கியிருப்பதாக உணருகிறேன். இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அந்த முடி மிகவும் இறுக்கமாக இருப்பதால் நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை. இதுகுறித்து நான் மருத்துவரிடம் ஆலோசனை செய்தேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு மருத்துவரை பரிந்துரை செய்வார்கள்.

ஆனால், மருத்துவர்களால் என்னுடைய பிரச்சினையை கண்டறிய முடியவில்லை. இதனால் சக மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பார்கள். மருத்துவமனையில் காலை முதல் இரவு வரை இருந்துள்ளேன். ஆனால் யார் ஒருவரும் என் பிரச்சினையை கண்டறியவில்லை.

என் வாயில் முடி இல்லை என்றாலும், அந்த உணர்வு என்னை ஏதோ செய்கிறது. ஒவ்வொரு மருத்துவராக சென்ற பிறகு கடைசியாக மனநல மருத்துவரை பார்க்கும்படி பரிந்துரை செய்தார்கள். அவரிடம் ஆலோசனை செய்த பிறகும்கூட என் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை’’ என்றார் அவர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்