day, 00 month 0000

மேற்கத்திய விமர்சனங்களை மீறி ரஷ்யாவும் சீனாவும் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து

வர்த்தகம் மற்றும் விளையாட்டு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ரஷ்யா மற்றும் சீன அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் சீனாவின் உறவுகளை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு செல்வதாக ரஷ்ய பிரதமர் மைக்கல் மிஷுஸ்டின் கூறினார்.

பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லீ கியாங்குடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மொஸ்கோவின் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த மிக உயர் ரஷ்ய அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மோதல் காரணமாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா, சீனாவின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்