day, 00 month 0000

கனடாவில் 48 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட கொலையாளி

கனடாவில் 1975ம் ஆண்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றின் கொலையாளி குறித்த தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் மொன்றியால் பகுதி பொலிஸார் குறித்த கொலையாளி பற்றிய மர்மத்தை கண்டு பிடித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் மிக நீண்ட காலமாக காணப்பட்ட ஓர் கொலை மர்மம் பற்றிய தகவல்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1975ம் ஆண்டு 16 வயதான ஷெரோன் பிரியர் என்ற சிறுமியை படுகொலை செய்த கொலையாளியே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைகளின் மூலம் கொலையாளி யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொலையாளியான பிரான்கிளின் மேய்வுட் ரோமேய்ன் என்பவர் கடந்த 1982ம் ஆண்டில் தனது 36 வயதில் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வெர்ஜினியாவில் அடக்கம் செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரின் சடலம் தோண்டு எடுக்கப்பட்டு கொலைச் சம்பவம் குறித்த மர்மத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஷெரேன் பிரியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்