// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனடாவில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது - இலங்கையில் அவ்வாறு இல்லையாம்

மே-18 என்பது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை நாள் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த 18ஆம் திகதி தெரிவித்த கருத்தால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய சபை அமர்வின் கேள்வி நேரத்தின் போதே விமல் வீரவன்ச இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

கடனாவிலிருந்த செவ்விந்தியர்களை கனேடிய அரசாங்கம் மனிதப்படுகொலை செய்ததாகவும் அங்கு ஜூன் மாதம் 21 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

எனவே இலங்கையிலுள்ள அனைவரும் இணைந்து ஜூன் மாதம் 21 ஆம் திகதியை கனடாவில் இடம்பெற்ற மனித படுகொலை நாளாக அறிவித்து அதனை அனைவரும் கொண்டாடவேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெறாத இனப்படுகொலையை அவர்கள் கொண்டாடும்போது கனடாவில் நடைபெற்ற அவலத்தை கொண்டாடுவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்