// print_r($new['title']); ?>
மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணங்களாக உள்ளன.
மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் ஆகிய இடங்களில் அவை உள்ளன.
ஆனால், இங்கே பௌத்த குடும்பங்கள் ஐம்பது கூட இல்லை. பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது