cw2
ஆப்பிரிக்க நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
லிபியாவின் தலைநகரான திரிபோலி அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள கராபௌலியில் இருந்து 60-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் கடலில் மூழ்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாயமான சிலரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.