cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ஜெர்மனியில் மத குருமார்களின் அதிர்ச்சி செயல்

ஜெர்மனி நாட்டில் கத்தோலிக்க மத குருமார் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுப்பட்டதாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த காலங்களில் கத்தோலிக்க மத குருமார்கள் பாலியல் துஸ்பிரயோக விடயங்களில் ஈடுப்பட்டுள்ளதாக பல விசாரணை கமிஷன்கள் ஆரம்பிக்கப்பட்டு  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளையில் குறித்த மத குருமார்கள் தொடர்பில் பல புகார்கள் வந்த நிலையில் பிராந்தியத்திற்கு உரிய மறைமாவட்ட ஆயர்கள் அதன் தொடர்பில் கவனிக்க தவறியமை தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இந்நிலையில் தெற்கு ஜெர்மனியின் ஃபைர்பேர்க் ஆயர் சபைக்கு உள்ளடங்கிய பிராந்தியத்தில் மொத்தமாக 250 இவ்வகையான கத்தோலிக்க மத குருமார்கள் குறிப்பிட்ட காலங்களில் பாலியல் முறைகேடுகள் மற்றும் பாலியல் சீர்கேடுகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஆராய்வு ஒன்று தெரிய வந்திருக்கின்றது.

இந்நிலையில் 2008 ஆண்டு தொடக்கம் 2014 வரை பிராந்தியத்திற்கு உரிய மறைமாவட்ட ஆயர்களாக இருந்த ஒஸ்கா சைப் மற்றும் ஸொலிஸ் ஆகிய இரண்டு ஆயர்களும் இந்த விடயம் தொடர்பில் கூடுதலான விசாரணைகளை மேற்கொள்ள வில்லை.

இவர்களிடம் பல புகார்கள் வந்த நிலையில் குறித்த ஆயர் இருவரும் புகார்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பல ஆய்வுகளில் இப்பொழுது தெரியவந்திருக்கின்றது.

மொத்தமாக எண்ணாயிரம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை கமிஷன் தீவிரமாக ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்