// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கட்டுப்படுத்த முடியாத ஆயுத போட்டியை எதிர்கொள்ளும் உலகம்

உலகம் கட்டுப்படுத்த முடியாத ஆயுதப் போட்டியை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய உயர் தூதர் கூறியுள்ளார். 

பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய ரஷ்ய  உயர் தூதரான கிரிகோரி மஷ்கோவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

கணிக்க கடினமாக இருக்கும் விளைவுகளைக் கொண்ட ஏவுகணை ஆயுதப் போட்டியை நாங்கள் காண்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம்  ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல்லாயிரக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த செயல்முறை ஒரு கட்டுப்பாடற்ற தன்மையைப் பெறுகிறது,என்றும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை மொஸ்கோ கடந்த பெப்ரவரியில், அமெரிக்காவுடனான ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து அணுவாயுத அச்சம் சற்று அதிகரித்திருந்தது. 

இந்நிலையில்,  நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் லிதுவேனியாவின் எல்லையில் உள்ள கலினின்கிராட் பகுதி உட்பட மாஸ்கோவின் தந்திரோபாய ஏவுகணை திறன்களை கட்டமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்