day, 00 month 0000

அதிகளவான குழந்தைத் திருமணங்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்

சர்வதேச ரீதியில் தெற்காசியாவில் மாத்திரமே அதிகமான சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் அறிவித்தள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக அதிகரித்த நிதி நெருக்கடிகள் மற்றும் பாடசாலை மூடல்கள் இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறிய குடும்பங்கள் வறுமை நிலை காரணமாக இளம் வயது பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் 290 மில்லியன் சிறுவர் மணமகள் உள்ளதாகவும் இது சர்வதேச ரீதியில் 45 சதவீதம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அதிக முயற்சிகள் தேவை என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பங்களாதேஸ், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள 16 இடங்களில் நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்களை உள்ளடக்கிய யுனிசெஃப்பின் புதிய ஆய்வில், 

கொவிட் முடக்கங்களின்போது படிக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ள மகள்களுக்கு திருமணமே சிறந்த வழி என்று பல பெற்றோர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது நேபாளத்தில் 20 ஆகவும், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேசில் 18 ஆகவும், ஆப்கானிஸ்தானில் 16 ஆகவும் உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆகவும், ஏனைய இடங்களில் 16 வயதாகவும் உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்