// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சூடானில் மோதல் நீடிப்பு- துணை ராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல்

சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.

சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்தது. நாடு முழுவதும் பெரும் கலவரம் பரவியுள்ளது. இந்த மோதலில் இந்தியர் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துணை ராணுவ படை தளங்களை குறி வைத்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அந்த படை தளங்கள் மீது குண்டு வீசப்பட்டன.

ஹர்டோமில் உள்ள நைல் ஆற்றின் குறுக்கே துணை ராணுவத்தின் ஆர்.எஸ்.எப். தளம் மீது பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

அதே போல் கபூரி, ஷார்க் எல்-நில மாட்டங்களில் துணை ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன.

இதனால் சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றுக்காக மனிதாபிமான அடிப்படையில் ஒரு மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புதல் அளித்து உள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்