cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை அணுகுமாறு மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் இந்த மோசடியாளர்களால் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Chartered Trading Standards Institute (CTSI) என்னும் அமைப்பு, மக்கள் இந்த மோசடியாளர்களை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது.

குறித்த மோசடியாளர்களிடம் விபரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன் பணத்தையும் இழக்க நேரிடலாம் என CTSI அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆகவே, மோசடிகளிலிருந்து தப்ப, மக்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்காக அரசின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.     


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்