// print_r($new['title']); ?>
day, 00 month 0000

'உக்ரைனுக்கு துணையாக எப்போதும் நிற்போம்' - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகின்றது. 

இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என பிளிங்கள் சுட்டி காட்டியுள்ளார். 

அதனால், போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்து வரவுள்ள காலங்களில் உக்ரைனின் அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

அவற்றில், உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான, கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன என அறிக்கை தெரிவிக்கின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்