// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரஷ்ய படையினரின் அட்டூழியங்கள் இனப்படுகொலையா?

உக்ரைனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்க்கர் டர்க் கூறியுள்ளார்.

ரஷ்ய படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் உக்ரைன் பெரிதும் சிரமப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

உக்ரைனின் மீதான ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 8,400 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 14,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், குறித்த எண்ணிக்கையை விட உயிரிழப்புக்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடுமையான சண்டை நிலவுவதுடன், ரஷ்ய படையினரின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது, ஆனால் இதனை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றது.

ரஷ்யா படையினரின் அட்டூழியங்கள் இனப்படுகொலையாக இருக்குமா என ஐக்கிய நடுகள் சபை ஆய்வு செய்து வருகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்