day, 00 month 0000

இரண்டாக உடையும் கண்டம்;வெளியான அதிர்ச்சி தகவல்

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிளந்துகொண்டிருப்பதாகவும் இடையே புதிய பெருங்கடல் உருவாகபோவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த சில வீடியோக்களில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த விரிசல் பிளவாக மாறுவது முழுமையாகத் தெரிய பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

பிளவுக்குப் பிறகு, உலகில் இன்னொரு புதிய பெருங்கடல் பிறக்கும், ஆனால் அடுத்த சில மில்லியன் ஆண்டுகளுக்கு மனிதன் உயிருடன் இருந்தால் மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின்படி, கண்டத்தின் மெதுவான பிரிப்பு 2005 இல் நிலநடுக்கத்திற்குப் பிறகு எத்தியோப்பியாவின் பாலைவனத்தில் உருவான 35 மைல் நீளமான விரிசலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியில் உள்ள நில அதிர்வு தரவு, கடலின் அடிப்பகுதியில் நடக்கும் இதேபோன்ற டெக்டோனிக் செயல்முறைகளால் பிளவு உருவாக்கம் தூண்டப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ஆப்பிரிக்க நுபியன், ஆப்பிரிக்க சோமாலி மற்றும் அரேபியன் ஆகிய மூன்று டெக்டோனிக் தகடுகளின் எல்லையில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இதுபோன்ற 6 நாடுகள் உள்ளன. அவை எல்லா பக்கங்களிலிருந்தும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன.

ஆனால் இந்தப் பிளவுக்குப் பிறகு ருவாண்டா, உகாண்டா, காங்கோ, புருண்டி, மலாவி, ஜாம்பியா ஆகிய இந்த 6 நாடுகளும் கடல் கரையைப் பெறும்.

கென்யா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் தலா இரண்டு பிராந்தியங்களைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் பல செய்திகள் வெளியிட்டுள்ளன. இருப்பினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் இது Fake Check ஆக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்