cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

குறிப்பிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம்; கனடாவில் வெளியான அவசர அறிவிப்பு

கனடாவில் குறிப்பிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொக்லெட் பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்மானங்களில் குறிப்பிடப்படாத ஒர் பால் வகை இந்த சொக்லெட்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

chocolate pineapple bites, dark chocolate pitaya bites, organic banana dark chocolate clusters, மற்றும் organic peanuts dark chocolate dipped போன்ற சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை சொக்லெட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வாமை பிரச்சினை உடையவர்கள் இந்த சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் இதனால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்