day, 00 month 0000

தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர்! சுவிஸில் பயங்கரம்

சுவிட்சர்லாந்தின் - ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பெண் வேலை செய்யும் உணவகத்தில் வைத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர், தனது 47 வயது நிரம்பிய மனைவியை இவ்வாறு கொலை செய்துள்ளதுடன் அதிக இரத்தப்போக்கு காரணமாக ஸ்தலத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்