// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சனத் தொகையை அதிகரிக்க சீனாவின் அதிரடி அறிவிப்பு

சீனாவில் சடுதியாக குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சீன அரசு, அந்நாட்டு இளைஞர்களை விந்தணு தானம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.

அண்மைய கொரோனா தொற்றால் பெருமளவானோர் உயிரிழந்தமை மற்றும் பிறப்பு வீதம் குறைவடைந்தமை காரணமாக சீனாவில் சனத்தொகையின் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில், அந்நாட்டு அரசு மக்கள்தொகை பெருக்கத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆரோக்கியமான எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விந்தணு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

சீன இளைஞர்களிடையே கடந்த 15 ஆண்டுகளில் விந்து தரம் குறைந்துவிட்ட நிலையில், விந்தணு தானம் செய்வதற்கு உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாவும் தயாராக இருப்பவர்களை வலை வீசி தேடி வருகின்றன விந்தணு வங்கிகள்.

குறிப்பாக, ஷான்சி, யுனான், ஷான்டாங், ஜியான்சி, ஹைனான் உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் உள்ள விந்தணு வங்கிகள் அடுத்தடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்காக, தானமாக பெறப்படும் விந்தணுக்களை சேமித்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளை விந்தணு வங்கிகள் செய்துவருகின்றன.

விந்தணுவை தானமாய் கொடுப்பவர்கள் மிகமிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். இதைவைத்துத்தான் இளைஞர்களைக் குறிவைத்துள்ளது சீன அரசு. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்