cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

புகலிட நாடுகளில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி புகலிட நாடுகளில் நீதிகோரும் ஒன்று கூடல்கள் மற்றும் சமூக வலைத்தள பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா அரசியல் அமைப்பின் பிரதியொன்று தீயிடப்பட்டிருந்தது.   

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்றலில் இன்று முற்பகல் முதல் பிற்பகல் வரை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒன்றுகூடலில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் தூதரகத்தில் சிறிலங்கா தேசியக்கொடி பறக்கவிடும் கம்பத்துக்கு அருகில் கறுத்த பலூன் கொத்துகள் பறக்க விடப்பட்டிருந்தன.

இதனை பின்னர் தூதரக வளாகத்தில் இருந்த பாதுகாப்பு பிரிவினர் அகற்றியதாக தெரிகின்றது.

அதேபோல பாரிஸ் நகரின் லா றிப்பப்ளிக் எனப்படும் சுதந்திர சதுக்கத்திலும் ஜேர்மன் தலைநகர் பேர்லினிலும் போராடங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பரிசில் மாலை 3 மணிக்கு இடம்பெற்ற ஒன்று கூடலில் ஏராளமானர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஐரோப்பிய நகரங்களின் போராட்டங்களை அடுத்து தற்போது கனடாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்