cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கனடாவில் இந்து கோவில் சேதம்

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். 

இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது. காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிராம்ப்டனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்