// print_r($new['title']); ?>
day, 00 month 0000

முதுமைக்கு விடைகொடுப்போம்;18 வயது இளைஞராக மாறும் 45 வயது மில்லியனர்

உலகில் விஞ்ஞானம் சாத்தியமற்றதாகத் தோன்றிய பல விஷயங்களை சாத்தியமாக்கியுள்ளது. இதில் குறிப்பாக வயதாகும்போது ஏற்படும் தளர்வை தடுக்க, ​​உடல் வடிவமாகவும் இளமையாகவும் இருக்க, பலவிதமான உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் பிற உடற்பயிற்சிகள் அல்லாத காஸ்மட்டிக் மற்றும் மருந்துகள் இப்போது பல வணிக சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. இதில் பெரும்பாலானோர் இளமையாக தோற்றமளிக்க அழகுசாதன மேம்பாடுகளைத் தேர்வுசெய்தாலும், 45 வயதான ஒரு மென்பொருள் மில்லியனர் தனது உடலில் வயதான தன்மையை மாற்றியமைக்க அதற்கும் மேலான சில முயற்சிகளை செய்து வருகிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவரும் கெர்னல்கோவின் மென்பொருள் தொழில்முனைவோரும், பயோடெக்னாலஜியில் முன்னோடியான பிரையன் ஜான்சன், 18 வயது இளைஞனாக தோன்றும் தனது லட்சியத்தை அடையவே இந்த முயற்சியை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு $2 மில்லியன் (சுமார் ரூ.16 கோடி) வரை செலவாகும் “project blueprint” என்கிற இந்த செயல்முறை மூலம் தனது  வயதை 5.1 ஆண்டுகள் குறைத்ததாகக் அவரே கூறுகிறார்.

இது குறித்து சமீபத்திய ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜான்சனின் உடல் செயல்பாடுகளை கண்காணித்து, “ஜான்சனின் ஒவ்வொரு உறுப்புகளிலும் வயதான செயல்முறையை மாற்றியமைக்க” 30 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவால் இந்த திட்டம் வழி நடத்தப்படுவதாகவும், இதற்கு மீளுருவாக்கம் செய்யும் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற 29 வயதான மருத்துவர் ஆலிவர் சோல்மேன் தலைமை வகித்து பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் குறிக்கோள் மனிதர்கள் தங்கள் உறுப்புகளின் உயிரியல் வயதை 25% குறைக்க முடியும் என்பதை நிரூபிப்பதாகும்.

இத்திட்டத்தின் படி ஜான்சன் தனது உடலில் வயதான செயல்முறையை மாற்றியமைக்க கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறாராம். அதற்காக அவர் ஒரு நாளைக்கு 1,977 கலோரிகளை உட்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்கிறார். அவரது காலை வழக்கம் தினசரி 5 மணிக்கு எழுந்து பிரத்யேக இயற்கை உணவுகளுடன் தொடங்குவதுதானாம்.

மேலும் அவரை கண்காணித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐக்கள், கொலோனோஸ் கோபிகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் போன்ற பல்வேறு கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தைக் கண்காணிக்கின்றனராம். இதன் மூலம் 37 வயது இளைஞனின் இதயத்தையும், 28 வயது இளைஞனின் தோலையும், 18 வயது இளைஞனின் நுரையீரல் திறனையும், உடற்தகுதியையும் அவர் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த முயற்சியை தொடர்ந்து செய்து தனது மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், பற்கள், தோல், முடி, ஆண்குறி மற்றும் மலக்குடல் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளும் அவரது 18  வயதின் போது செயல்படுவதைப் போலவே செயல்பட வேண்டும் என்பதே ஜான்சனின் குறிக்கோளாம். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது “நான் செய்வது தீவிரமானதாகத் தோன்றலாம், ஆனால் சுய-தீங்கு மற்றும் சிதைவு தவிர்க்க முடியாதது என்பதை நிரூபிக்க நான் முயற்சிக்கிறேன்” என்று ஜான்சன் கூறியுளளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்