ரொக் இசையின் மன்னன் என்று பெயர் பெற்ற எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான 54 வயதான லிசா மேரி பிரெஸ்லி காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இசைத்துறையில் நுழைந்த லிசா மேரி பிரெஸ்லி, கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார், மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
1968 ஆம் ஆண்டு பிறந்த அவர், 2003 ஆம் ஆண்டு தனது முதல் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார், அது பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்த கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் லிசா மேரி பிரெஸ்லியின் கடைசி பொதுத் தோற்றம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
லிசா மேரி பிரெஸ்லி மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை மணந்தார், பின்னர் பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜை மணந்தார்.
எனினும், பின்னர் அவர் இசைக்கலைஞர்களான டேனி கீஃப் மற்றும் மைக்கேல் லாக்வுட் ஆகியோரை மணந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.